Monday, December 24, 2018

அப மிருத்யு தோஷம்

     அபமிருத்யு தோஷம்  


செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

  அப மிருத்யு தோஷம் 

     இந்தவிமான தோஷமானது சாதகருக்கு  எதிர்பாராவிதமாக மரணத்தினையோ அல்லது மரணத்திற்கு நிகரான கண்டத்தினை தரவல்லது.

  இவ்வகை தோஷமானது அவரவர் சாதகத்தின் கிரக சேர்க்கை மற்றும் கிரக பலத்திற்கு  ஏற்ப பலனானது அமைய வாய்ப்பு உண்டு .

  இவ்வித தோஷம் கீழ்கண்டவற்றுள் ஒன்று தசா நாதனகவும் மற்றொன்று புத்தி நாதனாகவும் வரும்போது உருவாகிறது.

 முக்கியமாக 
 1) ஒருவரது ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்து அதிபதி ,

 2)எட்டாம்  இடத்தில் உள்ள கிரகம்,

 3)எட்டாம் அதிபதி சாரம் பெற்ற கிரகம் ,

4) எட்டாம் அதிபதி உடன் இணைந்த கிரகங்கள் 

இவை மட்டுமல்லாமல்
''பாதகாதிபதியும்,
அஷ்டமாதிபதியும் தொடர்பு கொள்ளும்போது அப மிருத்யு தோஷம் உண்டாகிறது.

இந்த தோஷ பாதிப்பானது மேற்கண்ட இரண்டில் ஒன்று தசா நாதனாகவும் மற்றொன்று புத்தி நாதனாகவும் வரும் காலங்களில் மட்டுமே மரணத்திற்கு நிகரான பயத்தினையோ அல்லது கண்டத்தினையோ தரலாம்.

 இது போன்ற அமைப்பானது உங்களது சாதகங்ளி்ல் இருந்தாலும் அவ்வித தோஷ பாதிப்பானது  மேற்கண்டவாறு நான் குறிப்பிட்ட  காலங்களில் மட்டும் தர வாய்ப்பு உண்டு .

  அப மிருத்யு தோஷம் மரணத்தினை மட்டுமே தரும் என தவறாக எண்ணிவிட  வேண்டாம். இவை எதிர்பாராத நெருப்பால் கண்டம்,வாகன விபத்து,நீரால் கண்டம் அல்லது ஒருவிதமான மனபயம் இவைகளை தந்துவிட்டு போகலாம்.

 இவ்வித தோஷ பாதிப்பானது நடைபெறும் போது அஷ்டமத்தில் சனி ,குரு ,ராகு அலலது கேது இடம்பெறாமல் இருத்தல் நல்லது.

  இந்த தோஷம் நடைமுறையில் உள்ள காலங்களில் மயிலாடுதுறை அருகில் உள்ள திருக்கடையூர் அமிர்தடேஷ்வரர் கோவில் சென்று மனம் உருக வழிபட இந்த தோஷபயம் விலகும்.

 நன்றி !

(தங்களது சாதக பலன்,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)

வாட்ஷ் அப்
  9715189647

   செல்
  9715189647
   7402570899

                 

அன்புடன்

 சோதிடர்ரவிச்சந்திரன்
    M.Sc .MA .BEd 
(ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் .)

My blogspot 
AstroRavichandran .
blogspot .com

AstroRavichandransevvai .
blogspot.com.

...............................

1 comment: