புத்திர ஸ்தானம்
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !
திருமண பந்தத்தில் இருவரை பொருத்தம் பார்த்து இணைக்க முற்படும்போது தம்பதிகள் இருவருக்கும் அவசியம் பார்க்கப்பட வேண்டிய பொருத்தங்களில் ஒன்று புத்திர பாக்கியம் ஆகும்.
நட்சத்திர அடிப்படையில் இருவருக்குமோ அல்லது ஒருவருக்கோ பால் உள்ள மரம் வந்து பொருத்தம் இருப்பினும் ,கட்ட அடிப்படையில் இருவருக்கும் புத்திர தோஷம் இல்லாமல் இருக்க வேண்டும் .
புத்திர சந்தானம் பற்றி அறிந்து கொள்ள ஒருவரது சாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தினையும்,புத்திர காரகன் குரு பகவானை பற்றியும் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும் .
சில நேரங்களில் புத்திர ஸ்தானம் பற்றிய ஆராய்ச்சியில் ஐந்தாம் இடத்திற்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் இடத்தினையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டியதாக உள்ளது.
புத்திர தோஷம் என்பது கீழ்கண்ட மூன்று வகைகளில் ஏதேனும் ஒரு வகைகளில் பாதிப்பினை தரலாம்.
1) புத்திரம் உருவாக காலதாமதம் ஆன நிலை,
2) ஆண் குழந்தை பிறக்காமல் பெண் குழந்தை மட்டும் பிறக்கும் நிலை,
3) குழந்தை பிறக்காத நிலை,
சாதக கட்டங்களில் உள்ள கிரகங்களின் பாதிப்பின் தன்மையினை பொறுத்து மேற்கண்ட வகையில் புத்திர தோஷம் உருவாகலாம்.
புத்திர ஸ்தானம் பற்றிய ஆராய்ச்சியி்ல் கீழ்கண்ட வகைகளில் ஆய்வு நிகழ்த்தப்பட வேண்டும் .
1) ஐந்தாம் இடத்தினில் அரவான ராகு ,கேது ,சனி போன்ற பாவ கிரகங்கள் இடம் பெறாமல் இருப்பின் சால சிறந்தது.
2) ஐந்தாம் இடத்தில் மறைவிட அதிபதிகளான ஆறு ,எட்டாம் இட அதிபதிகள் இடம் பெறாமல் இருப்பின் நல்லது.
3) ஐந்தாம் இட அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு ஆகிய இருவரும் நீசம்,பகை,அஸ்தமனம் அடையாமல்,
மறைவிடங்ளில் இடம் பெறாமல் மற்றும் பாவர் நட்சத்திர சாரம் பெறாமல் இருத்தல் நல்லது.
4) ஐந்தாம் இடத்தினையோ அல்லது ஐந்தாம் இட அதிபதியினையோ மற்றும் புத்திர காரன் குரு பகவானோ பாவரால் பார்க்கப்படாமலோ அல்லது பாவர் சேர்க்கை பெறாமலோ இருத்தல் நல்லது .
5) புத்திர காரகன் குரு பகவான் ஆனவர் அரவான ராகு,கேது சேர்க்கையோ அல்லது அதன் நட்சத்திர சாரமோ பெறாமல் இருப்பின் நல்லது .
நன்றி
வாட்ஷ் அப்
97 151 89 647
செல்
9715189647
7402570899
(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.Sc.MA.BEd .
(Teacher & Astologer ).
No comments:
Post a Comment