சனி+கேது ,சனி+ராகு மற்றும் சனி+செவ்வாய் சேர்க்கை பலன் எப்படி?
ஒரு ஜாதகத்தில் சனி+ கேது சேர்க்கை ,
சனி +ராகு மற்றும் சனி+செவ்வாய் சேர்க்கை
தரும் பலன்களை விளக்கம் தரவும்.?
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை!
சனி+கேது சேர்க்கை
ஒரு ஜாதகத்தில்
சனி+ கேது சேர்க்கையானது ஆன்மீக ஞானத்தை சாதகருக்கு வழங்குகிறது.மெல்ல, மெல்ல லொளகீக வாழ்விலிருந்து விடுபட்டு வாழ வழிவகை செய்கிறது.
5,9 மற்றும் 12 ஆம் இடங்களில் இக்கிரக சேர்க்கையானது ஆன்மீக ஞானத்தை சாதகருக்கு வழங்குகிறது.
மேற்கண்ட அமைப்பில் குரு பகவானுடைய பார்வை ஆன்மீகத்தை ஞானத்தை மிகுதி படுத்துகிறார்.
சனி+ராகு சேர்க்கை
பொதுவாக சனி+ராகு சேர்க்கையானது எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் அந்த ஸ்தானத்தை பாதிக்க செய்வதோடு ,அதற்கு ஏழாம் இடத்தினையும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது.
உதாரணமாக
இக் கிரக சேர்க்கையானது மணவாழ்க்கையுடன் தொடர்பு உடைய ஸ்தானங்களான 1,2,7,8 ஆம் இடங்களில் இடம்பெற்று இயற்கை சுப கிரக பார்வையின்றி இருப்பின் திருமண வாழ்வானது பாதிப்பு அடைகிறது.
இயற்கை சுப கிரக பார்வையானது இப்பலனில் மாற்றத்தை ஏற்படுத்த உதவுகின்றது.
சனி+செவ்வாய் சேர்க்கை
இக் கிரக சேர்க்கையானது இருக்கும் இடத்தினை விட பார்வை பெறும் இடத்தினை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கிறது.
உதாரணமாக
லக்கினத்திலிருந்து சனி+செவ்வாய் ஏழாம் இடத்தினை பார்வை செய்யும் போது தனக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையில் பாதிப்பு உண்டாகிறது.
இயற்கை சுப கிரக பார்வை இப்பலனில் மாற்றத்தை உண்டாக்கியது
(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
வாட்ஸ் அப்
9715189647
செல்
9715189647
7402570899
அன்புடன்
சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,M.A,BEd
(Teacher & astro researcher)
x
No comments:
Post a Comment