கிரகங்கள் படுத்தும் பாடு.
செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை ?
மனித வாழ்வினை வழி நடத்தி செல்வதில் கிரகங்கள் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை தொடர்ந்து எழுதி வருகிறேன்.
ஜாதகம் பார்க்க வரும் நீங்கள் கேட்கும் எந்த கேள்விகளுக்கு பலன் தர முதலில் கீழ் கண்ட மூன்று வகைகளில் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.
1) நீங்கள் கேட்கும் கேள்வி உடன் தொடர்பு கொண்ட ஸ்தானத்தை பார்க்க வேண்டும். அந்த ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருக்கிறதா? பாவ கிரகங்கள் இருக்கிறதா ? என்பதை கவனிக்க வேண்டும். இதே போல அந்த ஸ்தானத்தை சுப கிரகங்கள் பார்க்கிறதா? பாவ கிரகங்கள் பார்க்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
சுப கிரகங்கள் தொடர்பு அந்த ஸ்தானத்திற்கு 40 மதிப்பெண்ணையும், பாவ கிரகங்கள் தொடர்பு அந்த ஸ்தானத்தின் 40 மதிப்பெண்ணை தரவிடாமலும் செய்து விடவும்.
2) நீங்கள் கேட்கும் கேள்வியுடன் தொடர்புடைய ஸ்தான அதிபதி பாவ கிரகமா அல்லது சுப கிரகமா ,அந்த கிரகத்துடன் தொடர்பு கொண்ட கிரகம் எப்படிப்பட்டது .அந்த கிரகத்தின் ஸ்தான வலிமை, திருக்பலம் மற்றும் திக்பலம் போன்ற பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இந்த ஸ்தான அதிபதியுடைய வலிமை, சுபத்தன்மை மற்றும் பாவத்தன்மை ஆகிய இவற்றினை பொறுத்து 40 மதிப்பெண் இந்த இடத்திற்கு வழங்கப்படும்.
3) நீங்கள் கேட்கும் கேள்வி எந்த ஸ்தானத்தோடு தொடர்பு கொள்கிறதோ அந்த ஸ்தானத்திற்கு உரிய காரக கிரகத்தின் வலிமை ,சுபத்தன்மை மற்றும் பாவத்தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப 40 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட மூன்று வகைகளில் ஆய்வு செய்து பார்த்து அந்த கேட்கக்கூடிய கேள்விக்குரிய மதிப்பெண் எடுக்கப்படுகிறது .அவர் பெரும் மதிப்பின் அடிப்படையிலேயே பலனும் வழங்கப்படுகிறது. இங்கு லக்கனாதிபதியின் வலிமையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
பலன் வழங்கும்பொழுது நிறைவாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த சாதகர் கேட்ட கேள்வியோடு தொடர்புடைய கிரக தசை வருகிறதா? அல்லது வரவில்லையா? என்பதை பொறுத்து பலனின் தன்மை மாறுபடும் அந்த தசைவந்தால் ஒரு விதமான பலன், வராவிட்டால் ஒரு விதமான பலன் என்ற வகையில் பலன் அமையும்.
நன்றி.
வாட்ஸ் அப் & செல் & கூகுள் பே
097151 89647
மற்றொரு செல் : 7402570899
(தங்களது ஜாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஜ்ஜேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்