Saturday, September 29, 2018

இலக்கினாதிபதி பலம் இழந்தால்....

                         

"ஜாதக பாரிஜாதகம்"-என்னும் பழம்பெரும் ஜோதிட நூலில் இருந்து இன்றைய  தகவல்..


செவ்வாய்பட்டி ஶ்ரீ பத்ரகாளியம்மன் துணை!


     சோதிடர் என்ற முறையில்   நான் அடிக்கடி வலியுறுத்தி கூறக்கூடிய  கருத்து என்னவெனில் "ஒரு சாதகத்தில் இலக்கின நாதன் (இலக்கின அதிபதி) என்பவர் கெட்டுவிடக்கூடாது.ஏனெனில் இலக்கின நாதன்தான் சாதகரை வழிநடத்தக்கூடிய கேப்டன் போன்றவர் ".இவர் பலவீனம் அடைந்தால் தரும் பலனை விளக்கும் சோதிட பாடல்.


 " லக்கின நாதன் ஆறு ஈராறு      எட்டினிலிருக்க மிக்க மாம்பாவர் கூடி மிகு நோக்க ராசிநாதன்
ஒக்கவே வக்கிரமாகி யுடனீசஸ்தமாக
மிக்கவே தரித்திரனாகி வயதுமே குறைவன்தானே "


பாடலின் விளக்கம்


   இலக்கின அதிபதி மறைவிடங்களான ஆறு,எட்டு,பணிரெண்டாம் இடங்களில்  மறைந்து பாவர்கள் நோக்க , வீடு தந்தவரும்,சாரம் தந்தவரும் நீசம்,அஸ்தங்கம் அடைந்து இருப்பின் தரித்திரனாகி வயதுமே குறைவாக உடையவனாக இருப்பான்.இவை இலக்கினாதிபதி திசையில் சற்று கூடுதலாகவே இருக்கும்.


 வாட்ஸ் அப்
   97 151 89 647


     செல்
  740 257 08 99
    97 151 89 647


(தங்களது சாதக பலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்ததேதி,பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)


அன்புடன்
 சோதிடர்ரவிச்சந்திரன்
    M.Sc,MA,BEd
(Teacher & Astrologer)


No comments:

Post a Comment