பாதகாதிபதி என்றால் என்ன ?
செவ்வாய்பட்டி ஶ்ரீபத்ரகாளியம்மன் துணை!
பாதகாதிபதி என்றால் என்ன ? என முகநூல் வாசகர் கேட்ட கேள்விக்கான பதில்
பாரதியார் தனது "பாப்பா பாடலில்
" பாதகம் செய்வாரைக் கண்டால் பயம் கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு அவர் முகத்தில் உமிழ்ந்து விடு " என்றார்.
இதிலிருந்து "பாதகம் " என்பது கெடுதல் என்று பொருள் என விளங்கும்.
பாதகஸ்தான அதிபதியையோ "பாதகாதிபதி" என்கிறோம்.
பாதகாதிபதி உச்சம்,ஆட்சி போன்ற நேர்வலு பெறாமல் மறைமுக வலு பெறல் நல்லது.அதாவது மறைவிடங்களிலோ அல்லது திரிகோண ஸ்தானங்களில் இடம் பெறல் நல்லது.
இன்னும் சொல்லபோனால் பாதகாதிபதியை விட பாதக ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் மிக கெடுபலனை தரும்.
சர ராசிக்கு
(மேஷம்,கடகம்,துலாம்,மகரம் )
பாதகாதிபதி பதினொன்றாம் இட அதிபதி ஆவார்.
ஸ்திர ராசிக்கு
(ரிஷபம்,சிம்மம்,விருட்சகம்,கும்பம்)
பாதகாதிபதி ஒன்பதாம் இட அதிபதி ஆவார்.
உபய ராசிக்கு
(மிதுனம்,கன்னி,தனுசு ,மீனம் )
பாதகாதிபதி ஏழாம் இட அதிபதி ஆவார்.
நன்றி!
வாட்ஷ் அப்
97 151 89 647
செல்
740 257 08 99
97 151 89 647
(தங்களது சாதகபலன் மற்றும் திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd.